Posts

Showing posts from June, 2016

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

Image
                      தாமரை மஹால் அடுத்து சென்ற இடம் ஹசார ராமா கோவில். இந்த கோவிலைப் பற்றி நான் இந்த பயணத்தின் ஆரம்பத்திலேயே சிறு குறிப்பு ஒன்று கூறியிருந்தேன். அது என்னவென்றால் ஓர் திரைப்பட பாடலில் இந்த ஹம்பி பகுதியின் அனைத்து இடங்களையும் காண்பித்திருப்பார்கள் என்று. அது "என் சுவாச காற்றே" படத்தில் இருந்து "தீண்டாய்" பாடல்.       ராஜா தர்பார் நடத்துவதற்காக மிகப் பெரிய அரண்மனையைக் கட்டியிருக்கிறார்கள். ராஜா, மந்திரிகள், அவை பெரியோர்கள் அமருவதற்காக மிக நீளமான மற்றும் அகலமான மேடை போன்று அமைத்துள்ளார்.              அங்கிருந்து சற்று அருகில் நீர் சேகரிப்பதற்காக மிகப் பெரிய குளம் ஒன்றை மிக திட்டமிடலுடன் அமைத்துள்ளனர்.   ஓர் தந்தத்தை இழந்த யானையை மிக மெதுவாக விரல்களால் சுண்டினால் ஸ்வரங்கள் மீட்டுகின்றன.       மேலே உள்ள காணொளியில் மூன்று விதமான கற்கள் உலோகங்களால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லினை சுண்டும்போதும் ஒவ்வொரு சப்தங்களை எழுப்புகின்றன. இந்த விஷயமெல்லாம் நாங்கள் சுற்றுலா வழிகாட்டியை நாடியதால் தெரிய முடிந்தது.