ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று


               
                              பனிரெண்டு நபர்கள் அமரும் வண்டி.. ஏழு நபர்கள் மட்டுமே பயணித்தோம். அதுவே எங்களுக்கு வசதியாக இருந்தது. எங்களுடன் அந்த சுற்றுலா மைய அதிகாரியும் இணைந்து கொண்டார்.




                            போகும் வழியில் இன்னொரு சுற்றுலா வழிகாட்டி ஏறிக்கொண்டார். சுற்றுலா மைய அதிகாரி போகும் வழியில் இறங்கிக்கொண்டார். சுற்றுலா வழிகாட்டி தமிழ் மற்றும் கன்னடா மொழி பேசிக்கொண்டு வந்தார். அவர் பேசும் தமிழ் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது.

முதலில் பார்க்கச் சென்றது விருபாக்சா கோவில்.




         
             பழமையான கோவில். பார்க்கும்போது தெரிந்தது. சிறிது சிதிலம் அடைந்திருந்தது. வெளியே புகைப்படக் கருவிக்கு கட்டணம் உண்டு. வழிகாட்டி கோவிலின் சிறப்பை விவரித்துக்கொண்டே வந்தார்.


         வெளிநாட்டவர் இருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். World Heritage Temples என முதலில் வரும் வரிசைப்படி ஹம்பி வந்துவிடுகிறார்கள் போல. நான்கு, ஐந்து பேர் காண முடிந்தது. நல்ல வெயில்.




           கோவிலின் உட்ப்ரகாரத்தில் ஓர் இடத்தில் எங்களை நிறுத்தினார் வழிகாட்டி. சற்று இருட்டாக இருந்தது அந்த இடம். ஒரு சிறு துவாரம் வழியாக நேர் எதிர் சுவற்றில் ஒரு வெளிச்சம் விழுந்திருந்தது. அங்குள்ள சுவற்றின் மேலே மெல்லிய வெள்ளைத் துணி ஒன்றை வெளியில் எடுத்தார்.  அந்த வெளிச்சம் வரும் எதிர் திசையில் சுவற்றை ஒட்டி விரித்து பிடித்து சற்று முன்நோக்கி கொண்டு சென்றார். மேலே உள்ள படத்தில் இருக்கும் கோபுரமானது அந்த துவாரம் வழியாக இந்த வெள்ளைத் துணியில் தலை கீழாக Project ஆனது. மிக மிக அதிசயமாக இருந்தது. நாங்கள் அனைவரும் வாயடைத்துப் போனோம்.  Pin Hole Camera Technology அந்த காலத்தில் செயல்படுத்தியுள்ளனர். இப்படி ஒரு அதிசயம் எங்கும் காணவில்லை. நான் கூறுவது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். நம்பாமலும் இருக்கலாம். அந்த கோபுரம் அப்படியே தலை கீழாக நிழல் விழுந்தது. 





    மேலே உள்ள சுவற்றில் வெள்ளையாக தெரிகிறதா? அது தான். புகைப்படத்தில் தெளிவாக இல்லை. ஆனால் வெள்ளைத்துணியில் மிக துல்லியமாக கோபுரத்தின் தலை கீழ் உருவம் விழுந்தது. இந்த செய்தியெல்லாம் கண்டிப்பாக ஒரு வழிகாட்டி இருந்ததனால் மட்டுமே சாத்திமானது. அங்கு எங்களைக்கடந்து அதிகமான நபர்கள் சென்றனர். அவர்கள் யாவருக்கும் இப்படி ஒன்று இருப்பது தெரியவில்லை. தெரியாத ஊரில் தெரியாத வழிகாட்டியை விட கர்நாடகா சுற்றுலா மையம் மூலமாக சென்றதால் எங்களுக்கு நல்ல வழிகாட்டி கிட்டினார். 

           ***************************************************(தொடரும்************

                          உங்களது பின்னூட்டமே என்னை அதிகமாக பயணிக்க வைக்கும். 

Comments

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4