ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஐந்து


                                   பாதாள கோவில் அடுத்து சென்றது தாமரை மஹால். இந்த கட்டிடத்தின் வடிவம் தாமரை பூ போன்ற அமைப்பைப் பெற்றது. இந்த மஹால் என்பது இளவரசி குளிப்பதற்காக கட்டிய அரண்மனையாகும். உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை. 

                                         


  பச்சை புல்வெளியில் மிக நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடடம் சுண்ணாம்பு கலவைக்கொண்டு கட்டப்பட்டது. எப்போதும் போல கட்டிடத்தின் சுவற்றில் காதல் கிறுக்கல்கள். தாமரை இலை போன்று அமைக்கப்பட்டு தண்ணீர் அதனைச்சுற்றி இருக்கும்படி வடிவமைத்துள்ளனர். 



   யானை மண்டபம்:

                                 ராணி மண்டபத்திர்க்கு அருகிலேயே யானைகள் இளைப்பார ஒரு மண்டபம் அமைத்துள்ளனர். மிக நீளமான மண்டபம். ஒவ்வொரு கூடமும் ஒரு யானை தங்கும் அளவு அமைத்துள்ளனர். 




  பள்ளி மாணவர்களுக்கு வரலாற்று சுற்றுலா கூட்டிக்கொண்டு வந்திருந்தனர். சில வெளிநாட்டவர்கள் அங்கொன்று இங்கொன்றுமாக இருந்தனர். 

      அதன் பிறகு சென்றது ஒரு கோவில். சிலைகள் அனைத்தும் புராண கதைகள் சொல்கிறது. புகைப்படம் எடுத்துக்கொள்ள சிறந்த இடம். சுற்றுலா வழிகாட்டி சீக்கிரமாக அனைத்து இடத்தையும் காட்டிவிட வேண்டும் என எண்ணி எங்களை அவசரப்படுத்தினார். நாங்கள் பொறுமையாக அனைத்தையும் பார்த்துக்கொண்டு வந்தோம்.








     பெரிய தூண்களில் மிக மிக அழகாக வேலைப்பாடுகள் செதுக்கியுள்ளனர்.ஓர் அமைப்பினர் கோவில் தூண்களை சேதாரம் செய்துள்ளது வேதனையாக இருந்தது. 




  மேலே உள்ள குழந்தை எங்களுடன் பயணித்த குடும்பத்தாரின் குழந்தை. பத்ரி இந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டு வந்தார். நாங்கள் மூவர் மற்றும் அவர்கள் குடும்பத்தார் மட்டுமே பயணித்ததால் அனைத்து இடங்களையும் சீக்கிரமாக கவர முடிந்தது. 







      ****************************************************(தொடரும்)***********

(தங்களது பின்னூட்டதை எதிர்பார்க்கும் திசைத்தென்றல்)







Comments

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஐரா - பாகம் இரண்டு