Posts

Showing posts from January, 2016

ஐரா - பாகம் நான்கு

Image
           கோவிலைச் சுற்றி வரும்போது அழகான சுவர் சித்திரம் காண நேர்ந்தது. அஜந்தாவில் உள்ள ஓவியம் போன்று வரையப்பட்டது. கர்சிலைகளுக்கிடையில் ஓவியம் வரையப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.                                                                     பல உருவங்கள் அமையப்பெற்ற சிற்பங்கள் கீழே செதுக்கியுள்ளனர். யானை, குதிரை, சிங்கம், முதலை, எலி, கரடி போன்ற விலங்குகள் உள்ளன.  கோவிலில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோபுர கலசங்கள் சீரமைக்க சாரங்கள் அமைத்திருந்தனர். மேலே உள்ள படத்தில் சற்று உற்று பார்த்தீர்களானால் வாயை திறந்த வாக்கில் ஒரு உருவம் இருக்கும். இது எதற்கு அப்படி அமைத்துள்ளனர் என்றால் மழை நீர் சேகரிப்பதற்காக. மேலிருந்து வடிந்து வரும் மழைநீரினை கீழே சேமித்து வைப்பதற்காக இந்த துவாரத்தை அமைத்துள்ளனர். அந்த காலத்திலேயே மழை நீர் சேமிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தியுள்ளனர். இன்னும் சுவாரஸ்யமான சில சிற்பங்கள் கீழே: இந்த ஐராவதீஸ்வரர் கோவில் ஒவ்வொரு சிற்பங்களையும் மிக நுட்பமாக ஆழமாக ரசித்து பார்க்க வேண்டிய ஓ

ஐரா - பாகம் மூன்று

Image
          வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் சிற்பங்களின் சிறப்பு வெயிலின் தாக்கம் தெரியாதவாறு பார்த்துக்கொண்டது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடல் குடையும் காட்சி வடித்துள்ளனர். கோவில் முழுவதுமே நமது இதிகாசங்களை செவ்வனே செதுக்கியுள்ளனர். எத்துனை தலைமுறைகளாக இங்கு தங்கி சிற்பங்களை வடித்திருப்பார்கள் என எண்ணும்போது வியப்பாக இருக்கிறது. மகன், அப்பா, பாட்டன், முப்பாட்டன் என அனைத்து தலைமுறைகளும் இந்த கோவில் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் தங்க இருப்பிடம், உணவு என அனைத்தையும் மன்னன் பார்த்து பார்த்து செய்திருக்க வேண்டும்.                      கோவிலின் அமைப்பு சிறந்த கட்டுமானத்திற்கான எடுத்துக்காட்டு. வெள்ளம் வந்தாலும் கோவிலை தாக்காது வண்ணம் நன்கு மேடை போன்று உயரமாக அமைத்துள்ளனர். நாம் கோவிலின் சுற்று சுவர் பக்க வாட்டில் நின்றால் நாம் சற்று உயரம் குறைவாக இருப்போம். வளைவுகளின் மடிப்பில் சிற்பியின் நேர்த்தி தெரிகிறது. மேலே உள்ள படத்தில் சிறு சிறு துவாரங்களை அழகாக அமைத்துள்ளனர். தேர் சக்கரத்தின் பாகங்கள் இருண்டு துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்ட

ஐரா - பாகம் இரண்டு

Image
               கோவிலின் உட்ப்ரகாரம் செல்லும் முன் மூன்று பாகங்களால் செய்யப்பட்ட கர்தேர் உள்ளது. படிமீது ஏறி கோவிலின் உள்ளே செல்லும் முன் அந்த படிகளில் அழகிய வேலைபாடு மிகுந்த சிற்பங்கள் உள்ளன. கீழே உள்ள புகைப்படத்தில் பார்த்தீர்களானால் தரை தளத்திற்கும் மேலே முதல் தளத்திருக்கும் எவ்வளவு உயரம் அமைத்து வடிவமைத்துள்ளனர் என காணலாம். இந்த இடைப்பட்ட இடத்தில் யானையின் உருவமுடன் வேறு உருவங்களும் உள்ளவாறு அமைத்துள்ளனர்.                புகைப்படத்தில் சிறிது ஜூம்(தமிழ் சொல் தெரியவில்லை) செய்து பார்த்தீர்களானால் தலை துண்டிக்கப்பட்ட பாலகர் காணலாம். முகலாயர் படையெடுப்பில் வெட்டப்பட்டுள்ளது. யார் மீது என்ன கோவமோ....அழகான சிற்பங்களைச் சிதைத்துள்ளனர்.                           படிகள் மீது ஏறிப் பார்த்தால் தூண்களிலும் மேற்கூரைகளிலும் சிற்பங்களை வடித்துள்ளனர். மேற்கூரை சிற்பங்கள் ஆச்சரியத்தை அளித்தது. மேற்கூரைகளைப் பார்த்தீர்களானால் ஒட்டு போட்டதற்கான எந்த தடயங்களும் கிடையாது. ஒரே நேர் கோட்டில் மிக நீளமான கல்லினை அமைத்து செதுக்கியிருக்கக்கூடும். நினைத்துப் பாருங்கள். வீட்டில் அண்ண

ஐரா - பாகம் ஒன்று

Image
                          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பதிவு இட்டு  மாதக் கணக்காகிவிட்டது.  இந்த பதிவின் மூலம் நானும் ஆட்டத்துல இருக்கேன்னு சொல்லிக்கறேன்.                            ஐராவதீஸ்வரர் கோவில். சிற்பங்களுக்கெல்லாம் கடவுள் என இந்தக்  கோவிலை தாராளமாகக்  கூறலாம். கும்பகோணத்தில் இருந்து ஒரு மணி நேர பயணமாக தாராசுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது இந்த ஐராவதீஸ்வரர் கோவில். பழைய பதிவில் கூறியது போல் விக்கிபீடியாவில் அனைத்து தகவலும் உள்ளது.  எனக்கு ஏற்பட்ட நினைவுகளை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கோவில் UNESCOவின் பராமரிப்பிர்க்குக் கீழ் வருகிறது. கோவிலை சுற்றி உள்ள தோட்டத்தின் பராமரிப்பு முறையைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளமுடிகிறது. பொதுவாகவே கும்பகோணம் ஊரின் சுற்று வட்டாரம் முழுவதும் கோவில்களால் நிரம்பி வழிகிறது. ஆனால் இந்த ஐராவதீஸ்வரர் கோவில் மட்டும் தனித்துவம் வாய்ந்தது. காரணம் இந்த கோவில் இராஜ இராஜ சோழனால் கட்டப்பெற்றது.  கோவிலின் வெளியில் இருந்துப் பார்க்கும்போது இந்த கோவிலின் சிறப்பு அவ்வளவு சிறப்பாகவா  இருக்குமா என்ன? என எண்ணத்தோன்றும்