Posts

Showing posts from September, 2015

தஞ்சைப் பெரிய கோவில் பகுதி 2

Image
கோவிலின் உள் வட்டாரத்தின் ஒரு பகுதியில் பட்டுப்புடவைகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். விலை மிகக் குறைவாக. ஒலிபெருக்கியில் ஏலம் நடத்திக்கொண்டிருந்தார்கள். இது அரசாங்கமே எடுத்து நடத்திக்கொண்டிருந்தது. என்னுடன் பயணித்தவர் ஐயாயிரம் விலை மதிப்புள்ள பட்டுப் புடவையை ஆயிரத்து முந்நூறு என வாங்கினார். இந்த புடவைகள் சிலையின் மீது சாத்தியவைகள். ஒன்றோ இரண்டோ முறை மட்டுமே உபயோகப்படுத்தியது.  வழியில் நடந்து செல்ல கம்பளம் விரிப்பு விரித்திரிந்தார்கள். நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு வெயிலின் சூடு பாதத்தில் தெரியாமல் இருக்கு தண்ணீர் இறைத்திருந்தார்கள். கோவில் உட்புறத்தின் தோற்றம்...கீழே..... உள்ளே பெரிய நந்தியின் பக்கம் செல்ல முடியவில்லை. காரணம் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது.  உள்ளே நடந்து செல்ல செல்ல நம் மனதில் இனம் புரியாத ஒரு அமைதி வந்து உட்கார்ந்துக் கொள்கிறது.  அமைதியைக் குலைக்கும் விதமாக முனு முனுவென கூட்டம். முன்டியடித்துக்கொண்டு நீளமாக கட்டிய கயற்றை உதறிக்கொண்டு ஈசனை வழிபட முயன்றனர். எந்த கோவிலின் உள்ளே சென்றாலும் தலைவாசலின் அகன்ற படியைத

தஞ்சைப் பெரிய கோவில் பகுதி 1

Image
                சமீபத்தில் தஞ்சைப் பெரிய கோவில் காணும் வாய்ப்புக்கிட்டியது. கூகுளார் துணை இருக்கும் போது என்னத்த புதுசா எழுத முடியும்? அது தான் எல்லாத்தகவலும் கொட்டிக்கிடக்குதே! என நானும் உங்களைப் போன்று எண்ணினேன். எனக்குப் பகிர விருப்பமானது தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றும் உணர்வுகளைத் தங்களுடன் பகிர வேண்டும் என்பதே... அவ்வளவே..... அது என்னமோ தெரியவில்லை. தஞ்சைப்  பெரியக்கோவிலைக் காணும் வாய்ப்பு எப்போதும் உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் மதிய நேரமாகவே வாய்த்துவிடுகிறது. கோவிலின் நடை, மாலை நான்கு மணிக்குத் தான் திறப்பார்கள் என கூறினார்கள்.  அது வரை என்ன செய்வது? உள்ளே செல்லாமல் உள் சுற்று வட்டாரத்தில் அரசு நடத்தும் தஞ்சாவூர் பொம்மைக் கடையின் வெளியில் அமர்ந்துக் கொண்டோம். ஒட்காருவதர்க்கு ஏதுவாக நல்ல திண்ணைகளை அமைத்திருந்தார்கள். விலை சற்று அதிகமாக வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு நேர் எதிரில் ஒரு வெளிநாட்டவர் ஒட்கார்ந்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தார். (UNESCO) கோவில்கள் அனைத்திலும் யாராவது ஒரு வெளிநாட்டவரைத் தவறாது பார்த்துவிடலாம். அப்படி இப்படி

கிருஷ்ண ஜெயந்தி

Image
சென்ற வருடம் போல இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக சென்றது. கிருஷ்ணர் என்றாலே நினைவிற்கு வருவது வெண்ணை, பானை, ராதா, "ஆயர்பாடி மாளிகையில்" பாடல். இத்துடன் எனக்கு நினைவிற்கு வருவது பால்ய வயதில் பார்த்த கிருஷ்ணர் பற்றிய தொலைக்காட்சி தொடர். தூர்தர்ஷனில் ஒளிபரப்பியது. பிரதி வாரம் ஞாயிறு காலை ஒன்பது  மணிக்கு ஒளிபரப்புவார்கள். மனம் கிருஷ்ணரிடமே லயித்துவிடும். காரணம் தூர்தர்ஷனைத்  தவிர மற்ற "தொலைக்காட்சி கிருஷ்ணர்" போட்டிக்குக் கிடையாது. அமுல் (The Taste Of India) விளம்பரத்தில் கிருஷ்ணர் கார்டூனில் கொளு கொளு கிருஷ்ணர் அழகாக சிரிக்கும் முகம் நினைவிற்கு வரும். எனது ஊரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் தான் அந்த கோவிலைக் கட்டினர். நன்கு விசாலமான இடம். போன வருடம் கிருஷ்ண ஜெயந்தி அன்று மிதமான கூட்டம் இருந்தது. இந்த முறை நீண்ட வரிசையில் நின்று கிருஷ்ணரை பார்க்க வேண்டியதாகிவிட்டது. "ஏனடா கிருஷ்ணா நீ இவ்வளவு பிரபலம் ஆகிவிட்டாயா?",  என மனம் வினவியது. மெதுவாக மக்கள் கிருஷ்ணனை நெருங்கிய வ