Posts

Showing posts from August, 2015

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 5

Image
மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. ஜோக் நீர்வீழ்ச்சி கீழே இறங்கி செல்வதற்கு படிகள் உள்ளன. ஆயிரம் படிகள் தாண்டி சென்றால் கீழே சில்லிடும் சாரல்களை மேலே படவிட்டு ரசிக்கலாம். நம் நேரம் இறங்கி போவதற்கான வழியை அடைத்து வைத்து விட்டார்கள். மேலேயே உட்காருவதற்கு மரப்பலகைகள் போட்டுள்ளனர்..... எவ்வளவு படங்கள் எடுத்தாலும் மனம் ஜோக் அருவியையே சுற்றி சுற்றி வந்தது..அருவியை சுற்றி நடைபாதை போன்று சலவை கற்களால் சமமாய் அமைத்துள்ளனர். தொங்கு பாலம் போன்று ஒரு மாதிரி ....... உடைந்த மரக்கிளையில் இரு நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாமும் அப்படியே.............. மணி இரண்டை தொட்டது. பசி வயிற்றை கிள்ளியது. சிகன்தூர் சௌடேஸ்வரி கோவிலுக்கு செல்லலாம் என பத்ரி கூறினார். மழை வேறு பெய்து கொண்டே இருந்தது. நேரம் அதிகமாகும்  காரணத்தினால் மறுத்து விட்டேன்.   மறுபடியும் மழை வெளுத்து வாங்க ஆரம்பித்தது. அங்கே உணவகங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு காம்ப்ளெக்ஸ் போன்று ஒரு இடத்தில் வைத்

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4

Image
ஒரு வழியாக ஜோக் falls சென்றடைந்தோம். எங்களை வரவேற்பதற்காக தாரை, தப்பட்டையுடன் வரவேற்பது போல், பேரிற்கு தகுந்தபடி ஜோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ வென மழை பெய்தது... பத்ரி பேருந்தின் படியிலேயே மழையில் போக முடியாமல் நின்று கொண்டார். நான் குடை எடுத்து வந்திருந்தேன். நுழைவாயில் கட்டணமாக இரண்டு பேருக்கு பத்து ருபாய். குடை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றோம். இயற்கை உபாதைகள் முடித்துக்கொண்டு வரும் வழியில் கிளிக்கியது.......... ஜோக் பால்ல்சின் இரைச்சல் காதிற்கு எட்டியது......மிக ஆவலாக தலையை சிறிது எட்டி பார்த்தேன்..... .........ஆஆஹாஆஆஆஆஆஆ .... அற்புதம்.......... காண கண் கோடி வேண்டும்.......... பூமியில் இருக்கும் ஒரு சொர்க்கம்.............ஜோக் falls பார்க்க எத்தனை நாட்கள் தவமிருந்திருகிறேன் .......இதோ என் கண் முன்னால் விரிய போகும் அதிசயம்........... பனி சூழ்ந்துள்ள அந்த இடத்தில் சலனம் இல்லாமல், ஆர்பாட்டம் அதிகமில்லாமல் வழிந்தோடியது........... மனம் இந்த இடத்தை விட்டு போக விரும்ப இல்லை. இங்கையே தங்கி விட நினைத்தது.... மழையும்,

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 3

Image
காலை ஆறு மணிக்கு பத்ரியை அலாரம் வைக்க சொல்லியிருந்தேன். என்னை எழுப்பி விட்டுட்டு அவர் தூங்கிக்கொண்டிருந்தார். குளியலறையில் சுடு தண்ணீர் வரவில்லை. நல்ல குளிர். பாவிகளா ஏமாற்றி விட்டார்களே என எண்ணி கீழே போய் வரவேற்பாளரிடம் கேட்டேன். அவர் ஆறுமணிக்கே "நாங்கள் சுடுதண்ணீர் போட்டு விட்டோம்", என்றார்... சரி பத்ரியை முதலில் குளிக்க அனுப்பி விட்டு பிறகு சிறிது நேரம் கழித்து நாம் குளிப்போம், அப்போது சுடு தண்ணீர் வரும் என எண்ணினேன். நம்பிக்கை வீண் போக வில்லை. பிறகு குளித்து விட்டு, செக் அவுட் செய்தோம். வரவேற்பாளரிடம் விசாரித்தோம்.  சிகன்தூர் சௌடேஸ்வரி கோவில் மற்றும் ஜோக் நீர்வீழ்ச்சி  ஒரே நாளில் பார்க்க முடிமா என்று. அவர் பார்க்க முடியும் என்றார். இருந்தாலும் மனதில் ஒரு குழப்பம். காரணம். பயண தூரங்கள் தான்.  சிகன்தூர் சௌடேஸ்வரி கோவில் செல்வது என்றால் நமக்கு நேரம் குறைவு. காரணம், அந்த கோவிலுக்கு செல்வது என்றால் சாலை பயணம் செய்து, பிறகு ஒரு பெரிய ஆற்றை கடந்து போக வேண்டும். ஆற்றை கடக்க ஒரு படகு பயணம் செய்ய வேண்டும். இந்த இரண்டு பயணங்களை முடித்து அதற்குப்பின் ஜோக் செல்வது என்றால் கால தாமதம